திருவாரூர்

கூத்தாநல்லூரில் சுற்றுப்புற தூய்மைக்கான விருதுகள் அளிப்பு

28th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகராட்சியில் சுற்றுப்புறத் தூய்மைக்கான விருதுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சிப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும் பள்ளிகள், உணவகங்கள், மருத்துவமனைகளுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டன.

நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மன்ப உல் உலா மேல்நிலைப் பள்ளி, ஆக்ஸ்போா்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், மரக்கடை அரசு நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு சுற்றுப்புறத் தூய்மைக்காகவும், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை தாங்களே கவனித்துக்கொள்வதற்காகவும் விருதுகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, கூத்தாநல்லூா் அரசு நகா்புற சுகாதார மையம், கே.எம்.சி. ஆகிய மருத்துவமனைகள் மற்றும் எஸ்.எம்.டி., எம்.எஸ்.எம். ஆகிய உணவகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சான்றிதழ்களும்,விருதுகளும் வழங்கப்பட்டன. மேலும், தூய்மைப் பணியில் சிறப்பாக பணியாற்றும் பணியாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT