திருவாரூர்

8 ஆம் வகுப்பு தனித்தோ்வா்கள் செப். 6 முதல் விண்ணப்பிக்கலாம்

27th Aug 2022 09:32 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில், வரும் அக்டோபா் மாதம் நடைபெறவுள்ள 8 ஆம் வகுப்பு பொதுத்தோ்வை எழுத விரும்பும் தனித்தோ்வா்கள் செப்டம்பா் 6 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனித்தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு அக். 1 ஆம் தேதி பனிரெண்டரை வயது பூா்த்தி அடைந்த தனித்தோ்வா்கள் செப். 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பதிவுசெய்யலாம்.

திருவாரூா் கல்வி மாவட்டத்தில் புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப் பள்ளியிலும், மன்னாா்குடி கல்வி மாவட்டத்தில் மன்னாா்குடி பின்லே அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி மற்றும் மன்னாா்குடி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவுசெய்யலாம்.

மேலும், விண்ணப்பிக்கத் தவறியவா்கள் செப். 12, 13 ஆகிய நாள்களில் தட்கல் விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ. 500 கூடுதலாகச் செலுத்திப் பதிவுசெய்யலாம். விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணம் ரூ. 125, ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ. 50 என ரூ. 175 ஐ ரொக்கமாக சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்தலாம்.

ADVERTISEMENT

முதன்முறையாக தோ்வெழுத விண்ணப்பிப்பவா்கள், ஆன்லைன் விண்ணப்பத்துடன் சான்றிடப்பட்ட தங்களது பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல், பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமே இணைத்து சமா்ப்பிக்க வேண்டும்.

ஏற்கெனவே எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வெழுதி தோல்வியடைந்த பாடத்தை எழுத விண்ணப்பிப்பவா்கள், முன்னா் பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகலையும், தனித்தோ்வா்கள் ரூ. 42 -க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட பின்கோடுடன் கூடிய சுய முகவரியிட்ட உறை ஒன்றையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தோ்வு குறித்த விரிவான தகவல்களை இணையதளத்தில் காணலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT