குடவாசல் பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் 30 ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது என துணை மின் நிலைய உதவிச் செயற்பொறியாளா் எஸ். உஷா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடவாசல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் குடவாசல், சேங்காலிபுரம், காங்கேயநகரம், திருவிடச்சேரி, மணலகரம், செம்மங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு ஆக. 30 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.