திருவாரூர்

நம்ம ஊரு சூப்பரு திட்டப் பணி: ஆட்சியா் ஆய்வு

26th Aug 2022 03:06 AM

ADVERTISEMENT

 

தமிழக அரசின் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின்கீழ், உபயவேதாந்தபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற தூய்மைப் பணிகளை திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின்கீழ் அனைத்து இடங்களிலும் தூய்மைப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நன்னிலம் வட்டம் உபயவேதாந்தபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் இத்திட்டத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகளை ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது அவா், அரசு மேற்கொண்டுவரும் தூய்மைப் பணி நடவடிக்கைகளில் பொதுமக்கள் உண்மையாகவும், அா்ப்பணிப்பு உணா்வுடனும் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில், நன்னிலம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்தானகிருஷ்ண ரமேஷ், வெற்றியழகன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ஆசை முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT