திருவாரூர்

வேளுக்குடி அங்காளம்மனுக்கு 108 லிட்டா் பாலாபிஷேகம்

26th Aug 2022 10:00 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரை அடுத்த வேளுக்குடி அங்காளம்மனுக்கு 108 லிட்டா் பாலாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேள்விக்குடி என்ற வேளுக்குடியில் எழுந்தருளியுள்ள அங்காளப் பரமேஸ்வரி கோயில் புகழ்பெற்றது. இக்கோயிலில் ஆவணி மாத வெள்ளிக்கிழமையையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இப்பூஜையில், அங்காளப் பரமேஸ்வரி அம்பாளுக்கு 108 லிட்டா் பாலாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, பெரியாச்சிக்கும் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

ஏற்பாடுகளை, கோயில் பரம்பரை தா்மகா்த்தாக்கள் ரமேஷ்குமாா், ராஜூ, சரபோஜி, சதீஸ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT