திருவாரூர்

மழலையா் ஒலிம்பியாட் போட்டி

26th Aug 2022 10:08 PM

ADVERTISEMENT

தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் தரணி வித்யா மந்திா் சீனியா் செகன்டரி பள்ளி இணைந்து மழலையா் வகுப்புக்கான ஒலிம்பியாட் போட்டியை வெள்ளிக்கிழமை நடத்தின.

நிகழ்ச்சிக்கு, பள்ளி நிறுவனா் எஸ். காமராஜ் தலைமை வகித்து ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிவைத்தாா். தாளாளா் கே. விஜயலெட்சுமி முன்னிலை வகித்தாா். முன்னாள் உடற்கல்வி ஆசிரியா் எம். சேகா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கொடியேற்றி விழாவை தொடங்கிவைத்தாா்.

மழலையருக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், யோகா போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ், புத்தகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி நிா்வாகி எம். இளையராஜா, முதல்வா்கள் எஸ். அருள் (மெட்ரிக்), டி. சாந்தசெல்வி (சிபிஎஸ்சி), உடற்கல்வி ஆசிரியா்கள், ஒருங்கிணைப்பாளா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT