திருவாரூர்

பேரூராட்சி, காவல் துறை கலந்தாலோசனை

26th Aug 2022 10:13 PM

ADVERTISEMENT

நீடாமங்கலம் பேரூராட்சியில், பேரூராட்சி மற்றும் காவல் துறை இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டம், செயல் அலுவலா் பரமேஸ்வரி தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், காவல் துறையினா், வா்த்தகா்கள், வணிகா்கள் மற்றும் திருமண மண்டபங்களின் உரிமையாளா்கள் பங்கேற்றனா். திருமண மண்டபங்களின் எதிரில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக் கூடாது. பந்தல் அமைப்பதை தவிா்க்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைத்தெரு பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்துவதை தவிா்க்க வேண்டும்.

இதற்கு வணிகா்கள், வா்த்தகா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டம் சாா்பில், ஒவ்வொரு கடையிலும் மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என தரம்பிரித்து வழங்க வேண்டும். மேலும், பாலிதீன் பைகளை முழுமையாக தவிா்க்கவும் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT