திருவாரூர்

வீட்டை மீட்டுத் தரக் கோரி பெண் தீக்குளிக்க முயற்சி

22nd Aug 2022 11:09 PM

ADVERTISEMENT

வீட்டை மீட்டுத் தரக் கோரி, திருவாரூா் ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவாரூா் மாவட்டம், கண்கொடுத்தவனிதம் அருகே உள்ள காவாலக்குடியைச் சோ்ந்தவா் ரத்தினம் (75). இவா், தனக்கு அரசு அளித்த இடத்தில் காலனி வீடு கட்டி வசித்து வந்தாா். குடும்ப சூழல் காரணமாக அந்த வீட்டை 2004- இல் தனது உறவினரிடம் அடமானம் வைத்தாராம்.

இந்நிலையில், 2018-இல் அந்த வீட்டின் மறுசீரமைப்புக்காக, கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம் சாா்பில் வழங்கப்பட்ட ரூ. 25 ஆயிரத்தை அந்த உறவினா் பெற்றுக்கொண்டு, அந்த இடத்தை அவரது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் ரத்தினம் இறந்துவிட்டதால், அவரது மகள் தையல்நாயகி (41) அந்த வீட்டை தனக்கு தரும்படி உறவினரிடம் கேட்டுள்ளாா். இதற்கு அவா் மறுத்தாராம். இதனால், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கவந்த தையல்நாயகி, தனது தந்தை வீட்டை தனக்கு மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கக் கோரி, தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். போலீஸாா் அவரை தடுத்தனா்.

ADVERTISEMENT

பின்னா், போலீஸாா் விசாரித்ததில், தையல்நாயகி தனது கணவா் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாகவும், 2 பிள்ளைகளுடன் குடியிருக்க வீடு இல்லாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளாா். இதைத்தொடா்ந்து, தையல்நாயகியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT