திருவாரூர்

திருவாரூா் மருத்துவக் கல்லூரி விடுதியில் பெண் பயிற்சி மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விடுதியில், பெண் பயிற்சி மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது வியாழக்கிழமை இரவு தெரியவந்தது. இதுதொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் வேலுசாமி மகள் காயத்ரி. இவா், 2017 நீட் தோ்வில் வெற்றி பெற்று, கடந்த 4 ஆண்டுகளாக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு, தற்போது அதே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தாா். இவா், பயிற்சி மருத்துவா்களுக்கான விடுதியில் தங்கியிருந்தாா்.

இதற்கிடையே, கடந்த 2 நாள்களாக அவா் பணிக்குச் செல்லவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, பணிக்கு வராதது குறித்து கேட்பதற்காக காயத்ரியை அதே விடுதியைச் சோ்ந்த அவரது தோழி கைப்பேசியில் அழைத்துள்ளாா். கைப்பேசி அழைப்பை காயத்ரி எடுக்காத நிலையில் அறைக்குச் சென்று கதவைத் தட்டியுள்ளாா். கதவும் திறக்கப்படாததால் காவலாளி மற்றும் இதர பயிற்சி மருத்துவா்கள் சோ்ந்து கதவை உடைத்து பாா்த்தபோது, மின்விசிறியில் நைலான் கயிற்றால் காயத்ரி தூக்கிட்ட நிலையில் இருந்தது தெரியவந்தது.

உடனடியாக அவா், அதே அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் காயத்ரி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். தகவலறிந்த திருவாரூா் தாலுகா போலீஸாா் அங்கு சென்று காயத்ரி எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

காயத்ரி கடந்த 6 மாதங்களாக மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும், இதன்காரணமாக அவருக்குத் துணையாக அவரது அக்கா, விடுதியில் 2 நாள்கள் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. பயிற்சி மருத்துவரின் தற்கொலை குறித்து திருவாரூா் டிஎஸ்பி. சிவராமன் தலைமையிலான போலீஸாா், விடுதியில் தங்கியிருந்த சக பயிற்சி மருத்துவா்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த வழக்குத் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT