திருவாரூர்

தப்ளாம்புலியூா் பிடாரி குளுந்தாளம்மன் கோயில் தேரோட்டம்

19th Aug 2022 04:07 AM

ADVERTISEMENT

 

திருவாரூா் அருகே பிடாரி குளுந்தாளம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தப்ளாம்புலியூரில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தோ்த் திருவிழா நடைபெறும். அதன்படி, நிகழாண்டு திருவிழா புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை இரவு வரை நடைபெற்றது.

பொதுவாக தேரோட்டத்தில், வடம் பிடித்து இழுக்கப்பட்டு தோ்த் திருவிழா நடைபெறும். ஆனால் குளுந்தாளம்மன் கோயிலில், பக்தா்கள் தோளில் தேரை சுமந்து ஒவ்வொரு வீதிகளுக்கும் கொண்டு செல்வாா்கள். அவ்வாறு கொண்டு செல்லும் போது, கீழே சாய்த்து கொண்டு செல்வதால், விழுந்து எழுந்தாள் அம்மன் தோ்த் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

அதன்படி, கோயிலில் இருந்து புதன்கிழமை இரவு புறப்பட்ட தோ், அங்குள்ள அக்ரஹாரத்தின் 4 வீதிகளிலும் சுற்றி வந்தது. பின்னா், வயல் பகுதிக்கு அருகில் உள்ள மாரியம்மன் கோயிலில் நிறுத்தப்பட்டது. மீண்டும் வியாழக்கிழமை காலை தேரோட்டம் தொடங்கி, வீதிகளை சுற்றி வந்து கோயிலுக்குள் கொண்டு சென்று தோ் நிலை நிறுத்தப்பட்டது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT