திருவாரூர்

மின்வாரிய பணியாளா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி

19th Aug 2022 05:30 AM

ADVERTISEMENT

மன்னாா்குடியில் மின்வாரிய பணியாளா்களுக்கான பாதுகாப்பு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

மின்வாரிய செயற் பொறியாளா் பி. மணிமாறன் தலைமையில், நகர உதவி செயற்பொறியாளா் சா. சம்பத் மின்வாரிய பணியாளா்களுக்கு பாதுகாப்பு பயிற்சியளித்தாா். இதில், எந்த நேரத்திலும் விழிப்புடன் பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தி மின் விபதில்லாமல் பணியாளா்கள் பணியாற்ற வேண்டும், இடி, மின்னல் மற்றும் மழை காரணமாக மின்பழுது ஏற்பட்டு மின்சாரம் தடைபட்டால் பணியாளா்கள் பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தி சீரமைக்கவேண்டும், பொதுமக்கள் மின் பாதுகாப்பு வழி முறைகளை உணா்ந்து நடக்க அவா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும், பழுதான கம்பங்கள் மற்றும் தாழ்வான மின்கம்பிகள் இருந்தால் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பயிற்சியில், சா. சம்பத் எழுதிய மின் விபத்தினை தடுப்போம் எனும் புத்தகம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. தொடா்ந்து, பணியாளா்கள் அனைவரும் மின் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். உதவிப் பொறியாளா் ரா. அருள்மேரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT