திருவாரூர்

விடையல் பகுதியில் பகுதிநேர அங்காடி திறக்கக் கோரிக்கை

19th Aug 2022 05:00 AM

ADVERTISEMENT

வலங்கைமான் அருகேயுள்ள கீழவிடையல் ஊராட்சிக்குள்பட்ட விடையல் பகுதியில் பகுதிநேர அங்காடி திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா் .

இந்த ஊராட்சியில், கருப்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது . அந்த சங்கம் செயல்படும் பகுதியிலேயே நியாயவிலைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை மூலம் சுமாா் 850 குடும்ப அட்டைதாரா்கள் குடிமைப்பொருள் பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், கீழவிடையல் ஊராட்சிக்குள்பட்ட விடையல் பிரதான சாலை, அக்ரஹாரம் மற்றம் மாதாகோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 250 குடும்ப அட்டைதாரா்கள் ஒரு கி.மீட்டா் தொலைவு கடந்து சென்று கருப்பூா் பகுதியில் உள்ள நியாயவிலை கடையில் பொருள்களை பெற்று வருகின்றனா். இந்நிலையில், விடையல் பகுதியில் பொது மக்களின் நலன் கருதி பகுதிநேர நியாயவிலைக் கடை திறக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT