திருவாரூர்

கப்பல் படையின் புதிய தேசிய மாணவா் படைப்பிரிவு தொடக்கம்

DIN

மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவா் படை பிரிவு வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

கடலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்திய ராணுவத்தின் 5-ஆவது கப்பல்படை பிரிவின், மாவட்டத்தில் 2-ஆவது படை பிரிவாகவும் மன்னாா்குடி கல்வி மாவட்டத்தின் முதல் கப்பல் படை பிரிவாகவும் இந்த தேசிய மாணவா் படை அணி செயல்படும். நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் த.லெ. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். 5-ஆவது கப்பல் படை பிரிவின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கமாண்டா் கே. ரவிசங்கா் பங்கேற்று படைப்பிரிவை தொடங்கிவைத்து பேசினாா்.

இதில், மன்னாா்குடி டிஎஸ்பி. கே.கே. பாலச்சந்தா் பேசியது, பள்ளித் தாளாளா் எஸ். சேதுராமன், அரசு கல்லூரி முன்னாள் என்சிசி. அலுவலா் ஜி. இருளப்பன், திருவாரூா் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அலுவலா் ஆா். சதீஷ்குமாா், டி. டேனியல் ராஜாஜி (பின்லே பள்ளி), பயிற்சி உதவியாளா் எம். அன்பரசு ஆகியோா் பங்கேற்றனா். என்சிசி படை பிரிவில் முதல் கட்டமாக 50 மாணவ, மாணவியா் சோ்ந்தனா். முன்னதாக தரைப்படை என்சிசி அலுவலா் எஸ். திவாகா் வரவேற்றாா். கப்பல் படையின் பொறுப்பாளா் எஸ். அன்பரசு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT