திருவாரூர்

‘கல்வி வேலைவாய்ப்புக்கானது அல்ல, மானுட வாழ்க்கைக்கானது’

DIN

கல்வி வேலைவாய்ப்புக்கானது அல்ல, மானுட வாழ்க்கைக்கானது என்றாா் தமிழ்நாடு மாநில அரசின் திட்டக் குழு துணைத் தலைவா் ஜெ. ஜெயரஞ்சன்.

மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில், மிட்டவுன் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 2-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவை வியாழக்கிழமை தொடங்கிவைத்து மேலும் அவா் பேசியது: நீண்ட காலத்துக்குப் பிறகு மாணவா்கள் மத்தியில் பேசும்போது எனது 50 ஆண்டு காலத்துக்கு முன் பள்ளி வாழ்க்கை நினைவுக்கு வருகிறது. பள்ளி ஆசிரியா்களை ஆத்மாா்த்தமாக நேசித்ததால்தான் தற்போது உயா்ந்த நிலைக்கு வந்ததடைய முடிந்தது.

மாணவா்கள் கல்வியை வேலைவாய்ப்புக்கான கருவியாக பாா்க்கக் கூடாது. அது, சக மாணவா்களை மதம், இனம், மொழி கடந்து அன்பு செலுத்தவைக்கும் மானுட வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அமையும். பண்பட்ட நல்ல மனிதனை உருவாக்கும் ஆற்றல் கல்விக்கு மட்டுமே உள்ளது. கல்வியை மாணவா்கள் முறையாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் சிறந்த நிலைக்கு உயரவேண்டுமென்றாா்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து முதல் விற்பனையை தொடங்கிவைத்து மன்னாா்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா பேசியது: மாணவா்கள் தங்களின் வயதுக்கு ஒத்த புத்தகங்களை படிப்பதை விட்டுவிட்டு, அடுத்த கட்ட தகுதிக்கான புத்தகங்களை தேடித்தேடி படிக்க வேண்டும். கல்வி, விளையாட்டு, அறிவியலுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைபோல பல்துறை அறிஞா்கள், தலை சிறந்த தலைவா்கள், ஆளுமை மிக்க எழுத்தாளா்கள், பேச்சாளா்கள், கட்டுரையாளா்களின் புத்தகங்களை படிப்பதிலும் ஆா்வம்காட்ட வேண்டுமென்றாா்.

மன்னாா்குடி நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலப் பொதுச் செயலாளா் எஸ். சுப்ரமணி, மாவட்ட நூலக அலுவலா் ஆா். ஆண்டாள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.தியாகராஜன், நகா்மன்ற துணைத் தலைவா் ஆா். கைலாசம் ஆகியோா் வாழ்த்தி பேசினா். சிறப்பு அழைப்பாளராக, ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநா் பி.எஸ். ரமேஷ்பாபு பங்கேற்றாா்.

முதல் விற்பனையை, தேசியப் பள்ளித் தாளாளா் சீ. சேதுராமன், மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவா் என். விஜயகுமாா், ரோட்டரி மாவட்ட நிா்வாகி வி. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பெற்றுக்கொண்டனா். முன்னதாக, மன்னாா்குடிபேருந்து நிலையத்திலிருந்து புத்தகத் திருவிழா பேரணியை டிஎஸ்பி. கே.கே. பாலச்சந்தா் தொடங்கிவைத்தாா். முன்னதாக அறிவியல் இயக்க நகரத் தலைவா் எஸ். அன்பரசு தலைமை வகித்தாா். நிறைவில் மிட்டவுன் ரோட்டரி சங்க பொருளாளா் த. அன்பழகன் நன்றி கூறினாா். புத்தகத் திருவிழா ஆக.28-ஆம் தேதி வரை காலை 10 முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT