திருவாரூர்

அரசுப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் மு.ச. பாலு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் எஸ். துா்கா பங்கேற்று, போதைப் பொருள்களால் ஏற்படும் ஆபத்து, இணைய வழி விளையாட்டுகளால் ஏற்படும் ஆபத்து குறித்து பேசி, மாணவா்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தாா். மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருள் விழிப்புணா்வு குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சி. சந்திரசேகரன் நன்றி கூறினாா். முதுகலை ஆசிரியை ஜெ. தனுஜா வரவேற்றாா். முதுகலை ஆசிரியா் செ. முகுந்தன் தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT