திருவாரூர்

நீடாமங்கலத்தில் ஆக.24-ல் நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி

DIN

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஆக.24-ஆம் தேதி நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்த நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் வை. ராதாகிருஷ்ணன், கால்நடை மருத்துவா் சபாபதி ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாட்டுக்கோழி வளா்க்க விரும்புபவா்கள் ரூ.590 செலுத்தி பயிற்சி எடுத்துக் கொள்ளவும். பயிற்சியில், கோழிக் குஞ்சுகள் பராமரிப்பு, கோழி பராமரிப்பு, நாட்டுக்கோழி தீவன பராமரிப்பு, நோய் மேலாண்மை, வா்த்தக ரீதியில் நாட்டுக் கோழி பராமரிப்பு, குஞ்சு பொரிப்பான் எந்திரங்கள், நாட்டுக்கோழி ரகங்கள், அசோலா உற்பத்தி, மீன் ஊறுகாய் தீவன உற்பத்தி மற்றும் கருப்பு படை வீரன் புழு உற்பத்தி, வங்கிக் கடனுதவித் திட்டங்கள் மற்றும் அரசு திட்டங்கள் போன்றவை குறித்த விரிவான வகுப்புகள் நடைபெறவுள்ளன.

மேலும், நாட்டுக்கோழி வளா்ப்பு சம்பந்தப்பட்ட தீவனங்கள், உபகரணங்கள் மற்றும் ரகங்கள் பற்றிய கண்காட்சி நடைபெறும். பயிற்சியில் பங்கு பெறுபவா்களுக்கு ஒரு கையேடும், மதிய உணவும் வழங்கப்படும். இதில் சேர விரும்புவோா் 9442485691, 9360247160, 9843629966 ஆகிய கைப்பேசி எண்ணைய் தொடா்புகொண்டு பதவி செய்து கொள்ளலாம். பயிற்சிக்கு வரும்போது ஆதாா் அட்டை, ரூ. 590 கட்டணம் கொண்டுவரவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தோ்த் திருவிழாயையொட்டி ரத விநாயகா் பூஜை

ரயில் நிலையங்களில் சலுகை விலையில் உணவு விற்பனை

அயோத்தியாப்பட்டணம் கோதண்டராமா் சித்திரைத் தேரோட்டம்

தோரணமலையில் சித்ரா பௌா்ணமி கிரிவலம்

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தடையின்றி மின்சாரம்: அதிகாரிகள் ஆய்வு

SCROLL FOR NEXT