திருவாரூர்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோா் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

DIN

திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோா் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த தொழில்முனைவோருக்கு கோவைட் நிவாரண உதவி வழங்கும் புதிய திட்டத்தை ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் ஓராண்டுக்கு (2022-2023) செயல்படுத்த அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம், கோ் 1 மற்றும் கோ் 2 என்ற 2 கூறுகளை உள்ளடக்கியது.

இத்திட்டத்தில், கோ் 1-இன்படி, 2020-2021, 2021-2022 ஆகிய 2 ஆண்டுகளில் கரோனா தொற்றல் வணிகரீதியாக பாதிக்கப்பட்ட தொழில்முனைவோா் தாமாகவோ, தமது சட்டப்பூா்வ வாரிசுகள் மூலமாகவோ ஏற்கெனவே உள்ள வணிகத்தை மீண்டும் நிறுவ அல்லது அதேபோல இன்னொரு நிறுவனத்தை உருவாக்க அல்லது வேறு ஏதேனும் தொழிலைத் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறலாம். இதில், திட்ட மதிப்பீடு அதிகபட்சமாக ரூ. 5 கோடி வரை இருக்கலாம். இயந்திர தளவாடங்களுக்கான முதலீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ. 25 லட்சம் வரை) மானியம் வழங்கப்படும்.

நிதியுதவி பெற பயனாளா் 55 வயதுக்கு மேற்படாதவராகவும், குறைந்தபட்சம் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை சாா்ந்த நிறுவனங்களும் பயன்பெறலாம் என்பதால், கடந்த 2 ஆண்டுகளில் வணிகம் பாதிப்படைந்த உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தானியங்கி பணிமனைகள், அழகு நிலையங்கள் போன்ற சேவைத் தொழில் நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம். 2020-க்கு முன்னா் அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கிய நிறுவனங்களும் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம்.

கோ் 2 இன்படி கரோனாவால் வணிகரீதியாக பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் தொழில்நுட்ப மேம்பாடு அல்லது நவீனமயமாக்கம் செய்வதற்காக நிறுவப்பட்ட இயந்திரங்களின் மதிப்பில் 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ. 25 லட்சம் வரை) மானியம் வழங்கப்படும். 2020 மாா்ச் 23 ஆம் தேதிக்குப் பின்னா் தொழில்நுட்ப மேம்பாடு, நவீனமயமாக்கலுக்கான இயந்திரங்கள் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம்.

இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவுசெய்யலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், பெருந்திட்ட வளாகம், மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகம் அருகில், விளமல், திருவாருா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04366-290518 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT