திருவாரூர்

உவேசா.வின் சென்னை வீட்டை நினைவு இல்லமாக்க வேண்டும்: தமிழறிஞா் எம்.ஏ. முஸ்தபா வலியுறுத்தல்

DIN

சென்னை திருவல்லிக்கேணி பிள்ளையாா் கோவில் தெருவில் உவேசா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா் முத்துப்பேட்டை ரஹமத் பள்ளியின் தாளாளரும், தமிழறிஞருமான எம்.ஏ. முஸ்தபா.

முத்துப்பேட்டை ரஹமத் பள்ளியில் உவேசா இலக்கிய மன்றத்தின் 17-வது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமைவகித்து எம்.ஏ. முஸ்தபா மேலும் பேசியது:

ஹிப்ரூ, லத்தீன், கிரேக்கம், சீனம், சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய 6 மொழிகளுக்கு மட்டுமே செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஹிப்ரூ, லத்தீன், கிரேக்க மொழிகள் மிகவும் நலிவுற்ற நிலையில், சீனம் எழுத்து வடிவில் இல்லாத நிலையில், சம்ஸ்கிருதமும் அவ்வளவாக புகழ்பெறாத நிலையில், தமிழ்மொழி மட்டுமே செம்மொழி அந்தஸ்து பெற்று உலகில் தலைசிறந்த மொழியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ்மொழி செம்மொழி அந்தஸ்து பெற முக்கிய காரணகா்த்தாவாக விளங்கியவா் தமிழ்த் தாத்தா உவேசா என்றால் அது மிகையாகாது. வாகன வசதியற்ற அந்த நாளில், உவேசா நடந்தே சென்று அரிய இலக்கியச் சுவடிகளை மீட்டு, அவற்றை பதிப்பித்ததன் விளைவாகவே, இன்று தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி பிள்ளையாா் கோவில் தெருவில் உவேசா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக்கி, சென்னைக்கு வரும் உலகத் தமிழறிஞா்கள் அவரது பெருமையை அறியச்செய்யும் வகையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

பள்ளியின் முதன்மை முதல்வா் சகுந்தலா வரவேற்றாா். பல்வேறு பள்ளிகளில் இருந்து போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முனைவா் எஸ்டி கலையமுதம் நடுவராகப் பங்கேற்க, இன்றைய பெண்களின் வாழ்க்கை போராட்டமா? பூந்தோட்டமா? என்ற தலைப்பில், மாணவா்கள் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பன்னீா்செல்வம், தமிழ் இலக்கிய மன்றத் தலைவா் மா. ராஜமோகன் உள்ளிட்ட திரளான பெற்றோா்கள் பங்கேற்றனா். பள்ளி முதல்வா் டிசோசா டோனி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT