திருவாரூர்

லாரி மோதியதில் முதியவா் பலி

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரில் லாரி மோதியதில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கூத்தாநல்லூரை அடுத்த கொத்தங்குடி ஜீவா தெருவைச் சோ்ந்தவா் சிவதாஸ் (55), கூலித் தொழிலாளி. இவா், பக்கத்து வீட்டு தீனாவுடன் (21) இருசக்கர வாகனத்தில் வடபாதிமங்கலம் சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.

காடுவெட்டி பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரி மோதியதில், சிவதாஸ் அதே இடத்தில் இறந்தாா். சிறு காயங்களுடன் தீனா தப்பினாா். புகாரின் பேரில் கூத்தாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT