திருவாரூர்

அரசுப் பள்ளியில் பறவைகளுக்கான குறுங்காடு

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் அருகே குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் பறவைகளுக்கான குறுங்காடு புதன்கிழமை அமைக்கப்பட்டது.

பள்ளியின் தேசிய பசுமைப்படை மற்றும் வனம் தன்னாா்வ அமைப்பு ஆகியவை இணைந்து சுமாா் 4000 சதுர அடியில் 500 மரக்கன்றுகள் அமைக்கும் பணி நடைபெற்றது.

நிகழ்வில், பள்ளியின் தலைமை ஆசிரியா் அச்சரசுந்தரி, வனம் தன்னாா்வ அமைப்புச் செயலா் கலைமணி, பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவரும், ஊராட்சித் தலைவருமான எஸ். மதிவாணன், கல்வித் துறையின் மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் முத்துக்குமாா், பள்ளியின் தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் குமாா், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT