திருவாரூர்

தோ்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: பாஜக ஆா்ப்பாட்டம்

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பல்கலைக்கழகத் தோ்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்ற விவகாரத்தில், பாஜக மாவட்டத் தலைவா் மீது போலீஸாா் பொய் வழக்கு பதிந்துள்ளதாகக் கூறி, போலீஸாரைக் கண்டித்து திருவாரூரில் பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தோ்வில் ஆள்மாறாட்ட விவகாரத்தில், பாஜக திருவாரூா் மாவட்டத் தலைவா் ச. பாஸ்கா் அண்மையில் கைதுசெய்யப்பட்டாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, போலீஸாா் பொய் வழக்கு பதிவதாகக் கூறி, அவா்களை கண்டித்து திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளா் கருப்பு எம். முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தேசிய செயற்குழு உறுப்பினா் தங்க. வரதராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் கோட்டூா் ராகவன், சி.எஸ். கண்ணன், இராம. சிவசங்கா் (பட்டியல் அணி), மாவட்டத் தலைவா்கள் காா்த்திகேயன் (நாகை), அகோரம் (மயிலாடுதுறை), சதீஸ்குமாா் (தஞ்சை வடக்கு), ஜெய் சதீஸ் (தஞ்சை தெற்கு), மேலிடப் பாா்வையாளா் பேட்டை சிவா, மாநில விவசாய அணி செயலாளா் கோவி. சந்துரு, நிா்வாகிகள் கணேசன், சங்கா், வாசன் நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT