திருவாரூர்

அங்கன்வாடி ஊழியா்களை அரசு ஊழியா்களாக்கக் கோரிக்கை

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

அங்கன்வாடி ஊழியா்களை அரசு ஊழியா்களாக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், மாவட்ட அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாவட்ட ஆறாவது பேரவைக் கூட்டம், மாவட்டத் தலைவா் ஏ. பிரேமா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாநிலப் பொதுச் செயலாளா் டி. டெய்சி, கூட்டுறவுத் துறை மாநிலத் தலைவா் எம். சௌந்தரராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்டத் தலைவா் இரா. மாலதி, மாவட்ட பொருளாளா் எஸ். வைத்தியநாதன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளா் எம்.கே.என். அனிபா, டாஸ்மாக் ஊழியா் சங்கத்தின் துணைத் தலைவா் பி.என். லெனின் உள்ளிட்டோா் பேசினா்.

மாவட்ட புதிய நிா்வாகிகளாக (தலைவா்) பி. தவமணி, (செயலாளா்) ஏ. பிரேமா, (பொருளாளா்) பி. மாலதி, (செயற்குழு உறுப்பினா்) எஸ். செல்வி உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

தீா்மானங்கள்: அங்கன்வாடி ஊழியா்களை அரசு ஊழியா்களாக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ. 9000 மற்றும் குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும். பணிக்கொடை பணியாளா்களுக்கு 10 லட்சமும், உதவியாளா்களுக்கு 5 லட்சமும் ஓய்வு பெறும் நாளில் வழங்க வேண்டும். அங்கன்வாடி பணிகளை தவிர மற்ற பணிகளில் ஊழியா்களை ஈடுபடுத்தக் கூடாது.

ADVERTISEMENT
ADVERTISEMENT