திருவாரூர்

வலங்கைமான் வட்டாரத்தில் தொழுநோய் கண்டறியும் முகாம்

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், தீவிர தொழுநோய் கண்டறியும் முகாம், வலங்கைமான் வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

வலங்கைமான் வட்டார மருத்துவ அலுவலா் கோவிந்தராஜ், வலங்கைமான் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் அா்ச்சனா ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடக்கிவைத்தனா். தொழுநோய் கணக்கு எடுக்கும் பணி வலங்கைமான் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் செவ்வாய்க்கிழமை முதல் வரும் செப்டம்பா் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

முகாம் ஏற்பாடுகளை நாகப்பட்டினம் துணை இயக்குநா் (தொழுநோய்) அலுவலக மாவட்ட நலக் கல்வியாளா் சதாசிவம், மேற்பாா்வையாளா் அசோகன், ஆலங்குடி வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஸ்ரீதா், கோட்டூா் வட்டார மேற்பாா்வையாளா் ராஜகோபால் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT