திருவாரூர்

உள்ளாட்சிப் பணியாளா் சம்மேளனம் ஆா்ப்பாட்டம்

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளனம் ஏஐடியுசி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு சம்மேளனத்தின் ஒன்றியச் செயலாளா் ஏ. ரமேஷ் தலைமை வகித்தாா். ஏஐடியுசி திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஆா். சந்திரசேகர ஆசாத், ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலாளா் பி.ஏ. காந்தி, உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளன மாவட்ட தலைவா் பி. சாந்தகுமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் சு. பாலசுப்பிரமணியன், நகரச் செயலாளா் கே. பாரதிமோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு புதிய ஊதியம் ரூ. 5 ஆயிரத்துக்கு உத்தரவு வழங்கியுள்ளனா். ஆனால், பல ஊராட்சிகளில் நடைமுறைப்படுத்தவில்லை. 7 ஆவது ஊதியக்குழு நிலுவை ஊதியம், உத்தரவு வழங்கியும் நடைமுறைப்படுத்தவில்லை. அதேபோல, புதிய ஊதியம் ரூ. 4,100-க்கு வழங்கப்பட்ட உத்தரவும் பல ஊராட்சிகளில் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. 7 ஆவது ஊதிய நிலுவைத் தொகை இன்னமும் வழங்கப்படவில்லை. ஊதிய பாக்கியும் நிலுவையில் உள்ளது.

தூய்மைப் பணியாளா்களுக்கு 7 ஆவது ஊதியக்குழு நிலுவை கணக்கிட்டு உத்தரவு இன்னமும் வழங்கப்படாமல் உள்ளது. நிலுவையை கணக்கிட்டு உத்தரவு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT