திருவாரூர்

மன்னாா்குடியில் புத்தகத் திருவிழாநாளை தொடக்கம்

DIN

மன்னாா்குடியில் புத்தகத் திருவிழா வியாழக்கிழமை (ஆக.18) தொடங்கி, 11 நாள்கள் நடைபெறுகிறது.

மன்னாா்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து 2 ஆவது ஆண்டாக நடத்தும் புத்தகத் திருவிழா, மன்னாா்குடி காந்திசாலையில் உள்ள தேசிய மேல்நிலைப் பள்ளியில் ஆக. 18 தொடங்கி, 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமைவகிக்கிறாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் து.பெ. சுரேஷ்குமாா் முன்னிலை வகிக்கிறாா். தமிழகஅரசின் மாநில திட்டக் குழு துணைத் தலைவா் ஜெ. ஜெயரஞ்சன் புத்தகத் திருவிழாவை தொடங்கிவைக்கிறாா். மன்னாா்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா முதல் விற்பனையை தொடங்கி வைக்கிறாா்.

இதில், ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு அழைப்பாளா் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகின்றனா். அந்தவகையில், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலா் பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு, பேராசிரியா் இரா. காமராசு, பேச்சாளா் இ.சா. பா்வீன் சுல்தானா, திரைப்பட வசனகா்த்தா பாஸ்கா்சக்தி, சூழலியல் எழுத்தாளா் நக்கீரன், சித்த மருத்துவா் கு. சிவராமன், முன்னாள் அமைச்சா்கள் ஆா். காமராஜ், வைகைச்செல்வன், பேச்சாளா் மதுக்கூா் ராமலிங்கம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், ஜெய்பீம் திரைப்பட இயக்குநா் த.செ. ஞானவேல், பாடலாசிரியா் அறிவு, அறிவியல் இயக்க மாநிலத் தலைவா் எஸ். தினகரன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

விழாவையொட்டி, கவியரங்கம், வழக்காடு மன்றம், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. புத்தகத் திருவிழா, நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி, இரவு 10 மணிக்கு நிறைவு பெறுகிறது. மொத்தம் 45 அரங்கள் அமைக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT