திருவாரூர்

உஜ்வாலா யோஜனா திட்டத்தில் இலவச எரிவாயு பெறலாம்: ஆட்சியா்

DIN

திருவாரூா் மாவட்டத்தில் பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ், இலவச எரிவாயு இணைப்பு பெற்று, கிராமப்புற, நகா்புற ஏழைப் பெண்கள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில், எரிவாயு இணைப்பு இல்லாத குடும்பங்கள் இத்திட்டத்தில் பயன்பெற மின்னணு குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு எண் விவரம் மற்றும் குடும்பத் தலைவியின் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் தங்களது குடியிருப்புக்கு அருகேயுள்ள ஐஓசிஎல், பிபிசி, எச்பிசி எரிவாயு வழங்கு நிறுவனங்களை அணுகி பயன்பெறலாம்.

இத்திட்டம் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை எய்தும் வரை நடைமுறையில் இருக்கும். எனவே, எரிவாயு இணைப்பு இல்லாத குடும்பங்கள் விரைந்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

SCROLL FOR NEXT