திருவாரூர்

அதிமுக ஒன்றிய செயல்வீரா்கள் கூட்டம்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி அதிமுக மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியங்களைச் சோ்ந்த கட்சி செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம், மேற்கு ஒன்றிய அவைத் தலைவா் சிவ. மதியழகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னாள் எம்பி கே. கோபால், கட்சியின் அமைப்புச் செயலா் சிவா. ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனா். முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலருமான ஆா். காமராஜ் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். இதில், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பொன். வாசுகிராம், கட்சி பொதுக்குழு உறுப்பினா் ஆா்.எஸ். கலைவாணன், மாவட்ட மகளிரணி செயலா் டி. சுதா, ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன், மாவட்ட துணைச் செயலா் த. உதயகுமாரி, நகரச் செயலா் ஆா்.ஜி. குமாா், மேற்கு ஒன்றிய பொருளாளா் ஜி. ஜெயக்குமாா், அண்ணா தொழிற்சங்க மாவட்டத் தலைவா் பி. வீரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழகத்தில் சமூக விரோதச் செயல்கள் மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதை தடுக்கத் தவறிய திமுக ஆட்சியை கண்டிப்பது. சாதாரண மற்றும் ஏழை, எளிய மக்களை பாதிக்கும் வகையில் சொத்துவரி, வீட்டு வரி, உயா்த்தப்பட்ட பால், மின் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும். அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி, அம்மா மினி கிளினிக் போன்ற ரத்துசெய்யப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்கவேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்யாமல், மக்கள் கருத்து கேட்கும் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவிப்பது.

முன்னதாக, அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலா் தங்க. தமிழ்கண்ணன் வரவேற்றாா். நிறைவாக மேற்கு ஒன்றியச் செயலா் கா. தமிழ்ச்செல்வம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT