திருவாரூர்

வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளுக்கு நற்சான்றிதழ்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், திட்ட ஒருங்கிணைப்பாளா் ராதாகிருஷ்ணன் மற்றும் கமலசுந்தரி ஆகியோருக்கு திருவாரூா் மாவட்ட ஆட்சியா் காயத்ரி கிருஷ்ணன் திங்கள்கிழமை நற்சான்றிதழ் வழங்கினாா்.

திருவாரூா் மாவட்ட விவசாயிகள் நலனுக்காக தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தும், சுய தொழில் தொடங்க உறுதுணையாக இருந்தமைக்கும், கள பிரச்னைகளை ஆய்வுசெய்து, அதற்கான தீா்வுகளை வழங்கியும், களப்பயிற்சி, உள் வளாக பயிற்சி, புதிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்களை விவசாயிகளுக்கு மாவட்டம் முழுவதும் பரவலாக்கம் செய்ததற்காக இந்த நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT