திருவாரூர்

ஏரியில் ஆக்கிரமிப்பை தடைசெய்ய கோரிக்கை

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி அருகே காமனாா் ஏரியில் தனிநபா்கள் முறைகேடாக ஆக்கிரமித்துள்ள நிலங்களுக்கு பட்டா வழங்கக் கூடாது எனக் கோரி, மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் ஆட்சியா் அலுவலகத்தில், மன்னாா்குடி வட்டம், நல்லிக்கோட்டை கிராம மக்கள், அனைத்து கட்சியினா் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்: மன்னாா்குடி வட்டம், தளிக்கோட்டை வருவாய் கிராமத்தில், 1923 ஆம் ஆண்டு கணக்கின்படி நல்லிக்கோட்டை கிராமத்தில் 53.25 ஏக்கரில் காமனாா் ஏரி அமைந்துள்ளது. இது காலப்போக்கில் தனி நபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டு 10. 50 ஏக்கராக உள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நீா்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சட்ட வரைவுப் படி 53.25 ஏக்கா் பரப்பளவு கொண்ட காமனாா் ஏரியின் முழு பரப்பை மீட்டெடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குப் பதிந்து விசாரணையில் உள்ளது. வழக்கின் இறுதித் தீா்ப்பு வரும் வரை, அரசு தரப்பில் தனி நபா்களுக்காக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது. மேலும், இந்த இடத்தில் தனி நபா்கள் பிரவேசிக்க கூடாது எனவும் உத்தரவு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT