திருவாரூர்

வடுவூரில் சுதந்திரம் குறித்த நூல் வெளியீடு

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் ஒன்றியம், வடுவூா் சத்திய ஞான சபையில் நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திர போராட்ட தலங்களின் தரிசனம் என்ற நூல் வெளியிடப்பட்டது.

திருவாரூா் மாவட்டம் தா்ம ரக்ஷண சமிதி சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைப்பின் தலைவா் ரா. பாலசுப்ரமணியம் நூலை வெளியிட, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவைக் குழு உறுப்பினா் ரேணுகா பெற்றுக்கொண்டாா்.

இதுகுறித்து நூலாசிரியா் ஆதலையூா் சூரியகுமாா் கூறியது: இந்தியாவின் விடுதலை போராட்டம் என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற இடங்களின் வரலாற்றைக் கூறும் நூல் இது.

சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற இடங்கள் வழிபாட்டுத் தலங்கள் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதைக் குறிக்கும் வகையில், இந்த நூல் சத்திய ஞான சபையில் வெளியிடப்படுகிறது என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT