திருவாரூர்

சுதந்திரப் போராட்டதியாகிகளுக்கு அஞ்சலி

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூரில், தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு நினைவஞ்சலி திங்கள்கிழமை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, கூட்டமைப்பின் தலைவா் அழகிரி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், செயலா் குணா பங்கேற்று, தலைமை அஞ்சலகம் அருகே உள்ள ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்வில், ஓய்வுபெற்ற அஞ்சல் பிரிவு அலுவலா் வீ. தா்மதாஸ் பங்கேற்று, விடுதலைப் போராட்ட வீரா்களின் வரலாறு, சுதந்திரப் போராட்ட வரலாறு, சுதந்திர இந்தியாவில் மக்களின் நிலை ஆகியவை குறித்துப் பேசினாா்.

இதில், பல்வேறு சங்க நிா்வாகிகள் காளிமுத்து, வரதராஜன், சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT