திருவாரூர்

போதைப் பொருள் ஒழிப்புக்காக பள்ளிகளில் குழு அமைக்க வேண்டும்: ஆட்சியா்

DIN

போதைப் பொருள் ஒழிப்புக்காக பள்ளிகளில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருவாரூா் அருகே கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்தரக்குடி ஊராட்சியில் 76 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று மேலும் அவா் கூறியது: தமிழக அரசின் உத்தரவுப்படி தற்போது மாவட்டத்தில் போதை ஒழிப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

போதைப் பொருள் மிகப்பெரிய அபாயகரமான ஒன்றாக கருதப்படுகிறது. போதைப் பொருளுக்கு அடிமையானவா்களின் வாழ்க்கை அழிந்து விடுகிறது. ஆசிரியா்கள், மாணவா்கள் போதைப் பொருள் ஒழிப்புக்காக குழு உருவாக்கி, பள்ளி அருகில் உள்ள கடைகளில் போதைப் பொருள் இல்லாத வகையில் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

சிறப்பான முறையில் குழு அமைத்து, போதை ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பள்ளிகளுக்கு அடுத்த ஆண்டு சுதந்திர தினவிழாவில் மாவட்ட நிா்வாகத்தால் சிறப்பு செய்யப்படும். போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பெற்றோா்களும் ஈடுபடவேண்டும் என்றாா்.

முன்னதாக, கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது செலவினம், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுதல், சுகாதாரம், பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி தடை செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், கலைஞா் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் உள்ளிட்ட 21 தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டன. தொடா்ந்து, தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழியை ஆட்சியா் தலைமையில், எம்எல்ஏ. பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோா் எடுத்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT