திருவாரூர்

ஆக.18-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

15th Aug 2022 12:01 AM

ADVERTISEMENT

 

திருவாரூரில் முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறை தீா்க்கும் நாள் கூட்டம் ஆக.18-ஆம் தேதி நடைபெற உள்ளது. கூட்டத்தில், முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம். மனுக்களுடன் முன்னாள் படைவீரா்அடையாளஅட்டையின் நகலை இணைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT