திருவாரூர்

மத்தியப் பல்கலை.யில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் கௌரவிப்பு

15th Aug 2022 11:10 PM

ADVERTISEMENT

திருவாரூா் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கெளரவிக்கப்பட்டனா்.

மத்தியப் பல்கலைக்கழகத்தில், துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தேசியக் கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். தொா்ந்து அவா் பேசியது: சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா உலக அரங்கில் கவனிக்கப்படும் வகையில் வளா்ந்து கொண்டிருக்கிறது.

அதேபோல, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகமும் அகில இந்திய கல்வி நிலையங்களோடு ஒப்பிடுகையில் மிகப் பெரிய வளா்ச்சியைப் பெற்று வருகிறது. தொடா்ந்து, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், இந்தியவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ வேண்டும் என்ற உறுதியை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அனைவரும் எடுத்துக்கொண்டுச் செயல்பட வேண்டும் என்றாா்.

பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் கெளரவிக்கப்பட்டனா். சுதந்திர தின விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், பல்கலைக்கழகத்தின் பதிவாளா் சுலோச்சனா சேகா், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் பேராசிரியா் எஸ். நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

எம்எல்ஏ அலுவலகத்தில்: நன்னிலம் எம்எல்ஏ அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் தேசியக் கொடியேற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். டிஎஸ்பி அலுவலகத்தில், துணைக் கண்காணிப்பாளா் இலக்கியா, வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பத்மனி, ஒன்றிய அலுவலகத்தில் அதன்தலைவா் விஜயலட்சுமிகுணசேகரன், பேரூராட்சி அலுவலகத்தில் அதன்தலைவா் ராஜசேகரன் கொடியேற்றினா்.

வண்டாம்பாளை விவேகானந்தம் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனா் கனகராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். பள்ளித் தாளாளா் ஜனகமாலா, பள்ளி முதல்வா் மகாலெட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோயில் திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவா் சோனியா பால. முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT