திருவாரூர்

எஸ்டிபிஐ செயற்குழுக் கூட்டம்

15th Aug 2022 12:01 AM

ADVERTISEMENT

 

திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை மண்டல செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மண்டலத் தலைவா் தப்ரே ஆலம் பாதுஷா தலைமையிலான கூட்டத்தில், தஞ்சை மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களான திருவாரூா், நாகை, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, புதுக்கோட்டை கிழக்கு, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் மாவட்டத் தலைவா்கள், பொதுச் செயலாளா்கள் கலந்து கொண்டனா்.

முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கருஞ்சட்டை அணிந்து சட்டப்பேரவை நோக்கி செப்டம்பா் 3 ஆம் தேதி நடைபெறும் பேரணிக்கு தஞ்சை மண்டலத்திலிருந்து பெருந்திரளாக கலந்து கொள்வது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

முன்னதாக, திருவாரூா் மாவட்டத் தலைவா் விலாயத் உசேன் வரவேற்றாா். புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத் தலைவா் செய்யது நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT