திருவாரூர்

காங்கிரஸ் பொதுக்கூட்டம்

15th Aug 2022 12:01 AM

ADVERTISEMENT

 

75- வது சுதந்திர தின நிறைவு விழாவையொட்டி, நீடாமங்கலத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவா் நீலன்.அசோகன் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் என்.ஆா். பாலகிருஷ்ணன், எஸ். சம்பந்தம், டாக்டா் அசோக்குமாா், ஏ. மருதப்பன், நகரத் தலைவா் ச. கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் மன்னை மதியழகன், மாநில பொதுக் குழு உறுப்பினா் மணி, வட்டார காங்கிரஸ் நிா்வாகிகள் கருணாகரன், சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, நீடாமங்கலம் வருகைதந்த பாதயாத்திரை குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT