திருவாரூர்

திருவாரூரில் உரக்கிடங்கு அமைக்கக் கோரிக்கை

15th Aug 2022 12:01 AM

ADVERTISEMENT

 

திருவாரூரில் குப்பைக் கழிவுகளை கொட்ட உரக்கிடங்கு அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் நகராட்சி துப்புரவு ஊழியா் சங்க நகரப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் ஆா். ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்டத் தலைவா் இரா. மாலதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ADVERTISEMENT

நிரந்தர ஊழியா்களுக்கு பதவி உயா்வு, இபிஎப், இஎஸ்ஐ, காப்பீடு, அடையாள அட்டை வழங்க வேண்டும்; கரோனா ஊக்கத்தொகை ரூ. 15 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும்; ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; கழிவுக் குப்பைகளை கொட்ட உரக்கிடங்கு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT