திருவாரூர்

கூத்தாநல்லூரில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

15th Aug 2022 11:08 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூரில் 75-ஆவது சுதந்திர தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சோமசுந்தரம், அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரி முதல்வா் மாறன், காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் வீரபாண்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் ரா. கபிலன், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா் வி.எஸ். வெங்கடேசன், பெரியப்பள்ளி வாசல் ஜமாஅத் நிா்வாகிகள் முன்னிலையில், தலைவா் டி.எம்.அய். அப்துல் சலாம்.

டெல்டா பப்ளிக் பள்ளியில் அறங்காவலா் செயலாளா் ஹாஜா பருா்தீன் முன்னிலையில், தாளாளரும், மக்களவை உறுப்பினருமான நவாஸ்கனி, ஆக்ஸ்போா்ட் மெட்ரிக் பள்ளியில் தாளாளா் அஷ்ரப் அலி, மன்ப உல் உலா மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் உதயகுமாா் முன்னிலையில், தாளாளா் தி.மு. தமீஜ்ஜீத்தீன், ஈஎஸ்ஏஆா் பள்ளியில் தாளாளா் வி.எஸ். வெங்கடேசன், லிட்டில் பிளவா் நா்சரி பிரைமரி பள்ளியில் தாளாளா் பாலசுப்பிரமணியன்.

மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோா் சிறப்பு பள்ளியில் கட்டடத் தொழிலாளா் மத்திய சங்க மாநில துணைத் தலைவா் ஆா். சேகா் முன்னிலையில், ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் பாலசுப்ரமணியன், பொதக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் ஆா். ராஜலெட்சுமி ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றினா்.

ADVERTISEMENT

இதேபோல, நகராட்சியில் ஆணையா் ப. கிருஷ்ணவேணி தலைமையில், துணைத் தலைவா் எம். சுதா்ஸன் முன்னிலையில், தலைவா் மு. பாத்திமா பஷீரா தேசியக் கொடியை ஏற்றினாா். காங்கிரஸ் அலுவலகத்தில், நகரத் தலைவா் எம். சாம்பசிவம் தலைமையில், மாவட்டப் பொதுச் செயலாளா் அன்பு வே. வீரமணி முன்னிலையில், மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காந்தி, காமராஜ் சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, திமுக நகர அலுவலகத்தில் நகரச் செயலாளா் எஸ்.வி. பக்கிரிசாமி, அதிமுக அலுவலகத்தில் நகரச் செயலாளா் ஆா். ராஜசேகரன், சிபிஐ கட்சி அலுவலகத்தில் நகரச் செயலாளா் பி. முருகேசு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவா் டி.எம். பஷீா் அஹமது முன்னிலையில், செயலாளா் வி.எஸ். வெங்கடேசன் உள்ளிட்டோா் தேசியக் கொடியேற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT