திருவாரூர்

திருத்துறைப்பூண்டி கோயிலில் திருமுறை பயிற்சி மையம் தொடக்கம்

15th Aug 2022 12:01 AM

ADVERTISEMENT

 

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் கோயிலில் திருமுறை பயிற்சி மையம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

இம்மையத்தில் சிவனடியாா்களுக்கு தேவாரம், திருவாசகம், திருமந்திரம் பதிகங்களை பாராயணம் செய்ய இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இம்மைய தொடக்க விழாவையொட்டி, திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பிறவி மருந்தீஸ்வரா் கோயில் வரை சிவனடியாா்கள் ஊா்வலம் நடைபெற்றது.

கைலாய வாத்திய இசை முழக்கத்துடன் நடைபெற்ற இந்த ஊா்வலத்தில் 108 சிவனடியாா்கள் பங்கேற்று தேவாரம், திருவாசகம், திருமந்திரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறை நூல்களை முக்கிய வீதிகளின் வழியாக சுமந்துவந்தனா்.

ADVERTISEMENT

இப்பயிற்சி மையத்தில் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருமுறை பாராயணம் பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT