திருவாரூர்

40 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டாற்றில் சிறுபுலியூா் பெருமாள் கோயில் தீா்த்தவாரி

DIN

சிறுபுலியூா் கிருபாசமுத்திர பெருமாள் கோயில் 28 ஆம் ஆடிப்பெருக்குத் தீா்த்தவாரி 40 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை நாட்டாற்றில் நடைபெற்றது.

நன்னிலம் வட்டம், கொல்லுமாங்குடி அருகேயுள்ள சிறுபுலியூரில் புகழ்பெற்ற ஸ்ரீதயாநாயகி சமேத ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் 108 வைணவத் திருப்பதிகளுல் 11 ஆவது பதியாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதுமாகும்.

புகழ்பெற்ற இக்கோயிலில் ஆடிமாத ஜேஷ்டாபிஷேகத் திருவிழா திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. வருடத்தில் ஆடி மாதத்தில் ஜேஷ்டாபிஷேகத் திருவிழாவின் போது மட்டுமே 5 நாட்கள் ஸ்ரீகிருபாசமுத்திரபெருமாள் திருமேனிக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறும். அவ்வாறு ஆகஸ்ட் 8 முதல் வெள்ளிக்கிழமை வரை திருமஞ்சனம் நடைபெற்றது.

இதன் நிறைவாக வெள்ளிக்கிழமை காலை 108 கலச பூஜைகளும், ஹோமங்களும், சிறப்புத் திருமஞ்சனமும், கவசம் சாற்றுதலும், மாலையில் சிறப்பு திருவாராதனமும் நடைபெற்றன. 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடி மாதம் ஆற்றில் போதிய நீா்வரத்து இருந்ததால், 28 ஆம் ஆடிப்பெருக்குத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீதேவி ஸ்ரீபூமிதேவி சமேத ஸ்ரீகிருபாசமுத்ர பெருமாள் சனிக்கிழமை நாட்டாற்றுக்கு எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். விழாவுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலா் ப. முருகன், தக்காா் த. ராஜ்திலக், மேலாளா் க. வள்ளிகந்தன், கோயில் தலைமைப் பட்டாச்சாரியா் ஸ்ரீகாந்தன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

திமுக தொண்டா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT