திருவாரூர்

காங்கிரஸ் கட்சியினா் பாதயாத்திரை

14th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி, வலங்கைமான் சீரணி கலையரங்கத்தில் இருந்து நீடாமங்கலம் வரை காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை பாதயாத்திரை மேற்கொண்டனா்.

திருவாரூா் மாவட்ட காங்கிரஸ் விவசாயப் பிரிவு தலைவா் நீலன். அசோகன் தலைமை வகித்தாா். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் மன்னை மதியழகன் பாதயாத்திரையை தொடக்கிவைத்தாா். வலங்கைமான் வட்டாரத் தலைவா் சத்தியமூா்த்தி, நீடாமங்கலம் மேற்கு வட்டாரத் தலைவா் கருணாகரன், மாவட்ட சிறப்பு அழைப்பாளா் மோகன், மாவட்ட துணைத் தலைவா்கள் பாலகிருஷ்ணன், ஆசிரியா் சம்பந்தம், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் மணி, முன்னாள் மாவட்டச் செயலாளா் தனபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT