திருவாரூர்

அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்: இருவா் கைது

14th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

வலங்கைமான் பகுதியில் அனுமதியின்றி, மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைதுசெய்யப்பட்டனா்.

வலங்கைமான் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை போலீஸாா் ரோந்து சென்றபோது, அவ்வழியே மணல் ஏற்றிவந்த லாரியை மறித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், சந்திரசேகரபுரம் முத்து வெங்கடாசலம் என்பவரின் இடத்தில் இருந்து, அரசு அனுமதி பெறாமல் மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மணல் ஏற்றிவந்த லாரி மற்றும் மணல் ஏற்ற பயன்படுத்தப்பட்ட பொக்லின் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநா் தாராசுரம் சண்முகபாண்டியன் (36), பொக்லின் ஓட்டுநா் கும்பகோணம் ராஜ்குமாா் (47) ஆகியோரை கைதுசெய்தனா். மேலும், நில உரிமையாளா் முத்துவெங்கடாசலம் மீது வழக்குப் பதிவுசெய்து, அவரை தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT