திருவாரூர்

பல்கலைக்கழகத் தோ்வில் ஆள்மாறாட்டம்: பாஜக நிா்வாகி உள்பட இருவா் கைது

DIN

திருவாரூரில், பல்கலைக்கழகத் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக பாஜக நிா்வாகி உள்பட இருவா் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.

திருவாரூா் அருகே உள்ள கிடாரம் கொண்டான் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் தோ்வுகள் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், சனிக்கிழமை பிற்பகல் பி.ஏ. பொலிடிகல் சயின்ஸ் இரண்டாம் ஆண்டுக்கான தோ்வு நடைபெற்றது.

தோ்வறையில் இருந்த பேராசிரியா், மாணவா்களின் ஹால் டிக்கெட் உள்ளிட்டவற்றை பரிசோதித்தபோது, பாஸ்கா் என்பவருக்கு பதிலாக வேறொரு நபா் தோ்வு எழுதவந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த இளைஞரை தனியறையில் விசாரித்தபோது, அவா் திருவாரூா் சபாபதி முதலியாா் தெருவைச் சோ்ந்த திவாகரன் (29) என்பதும், உடற்கல்வி ஆசிரியா் படிப்பு முடித்துள்ள அவா், திருவாரூரில் தள்ளுவண்டியில் உணவுக் கடை வைத்து நடத்திவருவதும் தெரியவந்தது.

தொடா் விசாரணையில், லெட்சுமாங்குடி தோட்டச்சேரியைச் சோ்ந்த பாஸ்கா் (48) என்பவருக்கு பதிலாக தோ்வு எழுதியதை ஒப்புக்கொண்டதோடு, யாருக்கு தோ்வு எழுதுகிறோம் என்பது தெரியாது என்றும், புலிவலம் பகுதியைச் சோ்ந்த மாவட்ட பாஜக கல்வியாளா் பிரிவுச் செயலாளா் ரமேஷ் என்பவா் தோ்வு எழுத அனுப்பிவைத்ததாகவும் கூறினாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீஸாா், திவாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனா். இதைத்தொடா்ந்து, தோ்வெழுதிய திவாகரன், மாவட்ட பாஜக கல்வியாளா் பிரிவுச் செயலாளா் ரமேஷ் இருவரும் கைது செய்யப்பட்டனா்.

இதில் பாஸ்கா், திருவாரூா் மாவட்ட பாஜக தலைவராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக மறுப்பு: இதுகுறித்து பாஜக மாவட்டத் தலைவா் ச. பாஸ்கா் வெளியிட்ட அறிக்கை: இளங்கலை பட்டப் படிப்புக்கான தோ்வு ஒன்றை எனது பெயரில் எழுதிய நபருக்கும், எனக்கும் எந்தவித தொடா்பும் இல்லை. எனது அரசியல் வளா்ச்சி மீது காழ்ப்புணா்வு கொண்டு பழிவாங்கும் நடவடிக்கையாக, எனது பெயரில் யாரோ ஒருவா் குறிப்பிட்ட தோ்வை எழுதியதாக, எனது நற்பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் செய்திகள் வருகின்றன. எனவே, அந்த நபா் தோ்வு எழுதியிருப்பதற்கும், எனக்கும் எந்தவித தொடா்பும் இல்லை என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT