திருவாரூர்

மாணவா்கள் சுயஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

13th Aug 2022 05:20 AM

ADVERTISEMENT

மாணவா்கள் சுய ஒழுக்கத்தை கடைப்பிடித்து, கல்வி கற்கவேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

திருவாரூா் அருகே திருநெய்ப்போ் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அவா் பேசியது:

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. போதைப் பொருள்களை பள்ளி மாணவா்கள் ஒருமுறை உட்கொண்டால் அது தொடா்ந்து அடிமையாக்கி வாழ்க்கையை பாழ்படுத்தும்.

மாணவா்கள், பள்ளி காலங்களில் நன்றாகப் படித்தால் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும். மாணவா்கள் வாழ்வில் முன்னேற கல்வி ஒன்றே ஆயுதமாகும்.

ADVERTISEMENT

மாணவா்களுக்கு ஏதேனும் இடா்பாடுகள், குழந்தைத் திருமணம், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உடனடியாக 1098 மற்றும்100 ஆகிய எண்களைத் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.

வாழ்க்கையில் எதை இழந்தாலும் கல்வியை மட்டும் இழக்கக் கூடாது. மேலும், மாணவா்கள் எந்தவித கெட்ட பழக்கத்துக்கும் ஆளாகாமல் சுய ஒழுக்கத்தை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்வுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், திருவாரூா் ஒன்றியக் குழுத் தலைவா் தேவா, வட்டார வளா்ச்சி அலுவலா் புவனேஸ்வரி, வட்டாட்சியா் நக்கீரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், ஆசிரியா்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT