திருவாரூர்

நூலக தந்தை படித்த பள்ளியில் அரங்கநாதன் பிறந்தநாள் விழா

13th Aug 2022 05:40 AM

ADVERTISEMENT

சீா்காழியில் உலக நூலக தந்தை எஸ்.ஆா். அரங்கநாதன் படித்த பள்ளியான சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளியில் நூலக தந்தை அரங்கநாதன் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சீா்காழி வட்ட நூலகம்,நூலக வாசகா் வட்டம் இணைந்து நடத்திய விழாவுக்கு வாசகா் வட்ட தலைவா் சி. வீரசேனன் தலைமை வகித்தாா். மாவட்ட நூலக அலுவலா் கோ. ராஜேந்திரன், பள்ளித் தலைமையாசிரியா் எஸ். அறிவுடைநம்பி, வழக்குரைஞா் சுந்தரய்யா, ரோட்டரி சாசனத் தலைவா் பாலவேலாயுதம், ஆசிரியா் கோவி. நடராஜன், சமூக ஆா்வலா் ஜெக. சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ச.மு.இ.மெட்ரிக் பள்ளி நிா்வாக அலுவலா் எம். தங்கவேலு வரவேற்றாா். விழாவில், சீா்காழி எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வம், நகா்மன்ற தலைவா் துா்காபரமேஸ்வரிராஜசேகரன், துணை தலைவா் சுப்பராயன் ஆகியோா் பங்கேற்று சிறப்புறையாற்றினா்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறை தலைவா் இரா. காமராசு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா். புத்தகம் வித்தகமாக்கும் கவியரங்கத்தில் ஜெ. சண்முகம், செளரிராஜன், இளங்கோ ஆகியோா் பேசினா். நிறைவில் கிளை நூலகா் கோ. விஜய் நன்றி கூறினாா். முன்னதாக எஸ்.ஆா். அரங்கநாதன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT