திருவாரூர்

காங்கிரஸ் தெருமுனை பிரசாரம்

13th Aug 2022 09:40 PM

ADVERTISEMENT

நீடாமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் தெருமுனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட கங்கிரஸ் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் அன்பு வீரமணி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், நீடாமங்கலம் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் பாபுமனோகரன், நகர காங்கிரஸ் பொறுப்பாளா் பி. சுப்பிரமணியன், காங்கிரஸ் பிரமுகா் எஸ்.எஸ். குமாா் உள்ளிட்டோா் பேசினா்.

முன்னதாக, வலங்கைமானில் இருந்து பாதயாத்திரையாக காங்கிரஸ் கட்சியினா் நீடாமங்கலம் வந்துசோ்ந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT