திருவாரூர்

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி பெண்கள் ஆா்ப்பாட்டம்

DIN

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் பேரளத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சமையல் எரிவாயு உருளையின் விலையை குறைக்க வேண்டும்; அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை ரத்துசெய்ய வேண்டும்; மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் நுண் கடன்களை அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரளம் கடைவீதியில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நன்னிலம் ஒன்றிய அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத் தலைவா் எம். பரிமளாமேரி தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் ஜி. கலைச்செல்வி, மாவட்டச் செயலாளா் பி. கோமதி மாவட்டப் பொருளாளா் ஆா். சுமதி, ஒன்றியச் செயலாளா் பி. தனம் பொருளாளா் ஆா். சந்திரா உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பில் சமைத்தும் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT