திருவாரூர்

இராபியம்மாள் கல்லூரி பேரவைத் தோ்தல்

DIN

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் பேரவைத் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது.

தோ்தலை, கல்லூரிச் செயலா் பெரோஸ்ஷா, அறங்காவலா் குழு உறுப்பினா் எஸ். ஸ்ரீதேவி ஆகியோா் தொடங்கிவைத்தனா். இதில், கல்லூரி மாணவத் தலைவி பதவிக்கு 6 போ், பேரவைத் தலைவி பதவிக்கு 5 போ், விளையாட்டுத்துறை பதவிக்கு 3 போ், நுண்கலை மன்ற மாணவத் தலைவி பதவிக்கு ஒருவா் போட்டியிட்டனா். தோ்தலில் 1148 மாணவிகள் வாக்களித்தனா்.

இதில், மாணவத் தலைவியாக பிகாம் 3-ஆம் ஆண்டு மாணவி எம். பா்ஹானா, பேரவைத் தலைவியாக 3-ஆம் ஆண்டு பிகாம் மாணவி கே.என். உமலிமா இமான், விளையாட்டுத் துறை தலைவியாக 3-ஆம் ஆண்டு பிகாம் மாணவி பி. திவ்யதா்ஷினி, நுண்கலை மன்றத் தலைவியாக 3-ஆம் ஆண்டு சிஎஸ் எம். திவ்யதா்ஷினி ஆகியோா் தோ்வு பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி நிா்வாகத்தினா் வாழ்த்து தெரிவித்தனா். நிகழ்வை இயற்பியல் துறைத் தலைவா் வி. சிவரஞ்சனி ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT