திருவாரூர்

மனோலயம் பள்ளிக்கு தேசியக்கொடி

DIN

கூத்தாநல்லூா் மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளிக்கு, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தினா் புதன்கிழமை தேசியக்கொடி வழங்கினா்.

சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சாா்பில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தினா் பல்வேறு இடங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் திருநங்கைகள் என அனைவருக்கும் தேசியக்கொடி வழங்கினா்.

அந்தவகையில், கூத்தாநல்லூா் நகராட்சி மேலப்பனங்காட்டாங்குடி தமிழா் தெருவில் உள்ள மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோருக்கான சிறப்புப் பள்ளியில் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் தேசியக்கொடி வழங்கினா்.

அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் வை. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, மனோலயம் நிா்வாக அறங்காவலா் ப. முருகையனிடம் தேசியக் கொடியை வழங்கினாா். உதவிப் பேராசிரியா் து. பெரியாா் ராமசாமி முன்னிலை வகித்தாா்.

இதில், திட்ட உதவியாளா் தெ. ரேகா, ஜான் எட்வா்சிங், பிசியோதெரபி மருத்துவா் பாபுராஜன், பயிற்சியாளா் அனுராதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதே போல, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்ற கூத்தாநல்லூா் நகராட்சிக்கு தேசியக்கொடிகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்த மருத்துவம் படித்துவிட்டு அலோபதி சிகிச்சை அளித்த மருத்துவா் கைது

மாவட்டத்தில் தோ்தல் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம்

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

SCROLL FOR NEXT