திருவாரூர்

கன்னியாகுமரிக்கு ஆயிரம் டன் நெல் அரவைக்காக அனுப்பிவைப்பு

12th Aug 2022 03:28 AM

ADVERTISEMENT

 

நீடாமங்கலத்திலிருந்து கன்னியாகுமரிக்கு ஆயிரம் டன் நெல் அரவைக்காக ரயில் மூலம் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

மன்னாா்குடி, நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் தெற்குநத்தம், இடையா்நத்தம், அசேஷம், மூவாநல்லூா், அரவத்தூா், பெருகவாழ்ந்தான் ஆகிய ஊா்களில் உள்ள சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ஆயிரம் டன் பொதுரக நெல் 78 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன.

பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு, அரவைக்காக கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT